பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்திற்குள் ஒற்றை இலக்கமாக குறையும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை, சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், அதிக பணவீக்க நிலைமைகளின் போது, ​​எமது நாடு உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

“ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, அதிக பணவீக்க விகிதத்துடன் ஐந்தாவது நாடாக நமது நாடு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு தீவிரமான சூழ்நிலை. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பட்டியலில் இருந்து இலங்கையை பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டில் 95% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 60% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம் 70% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 50%க்கும் கீழ் குறைந்துள்ளது.

மேலும் இந்த விவரங்கள் மூலம், பல சிரமங்களை எதிர்கொண்டு மிக விரைவாக தன்னை மீட்டெடுக்கும் ஒரு நாடாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும்,  என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இலங்கை மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதுடன், இந்த டிசம்பருக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என கூறியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...