பலஸ்தீனியர்கள் தனியாக இல்லை: அல் அக்ஸா மசூதி மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை எச்சரித்தது துருக்கி

Date:

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய மத வழிப்பாட்டு தலமான அல் அக்சா மசூதியில் பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.

இஸ்லாமிய மதத்தினரின் புனித மாதமான ரமலான் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல் அக்சா மசூதியில் நேற்று இரவு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.

அல்-அக்சா வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி அருகே யூதர்களின் புனித தலமான டெம்பிள் மவுண்ட் அமைந்துள்ளதால் அங்கு வழிபாடு நடத்த இஸ்ரேலியர்கள் இந்த வழியாக தான் செல்வார்கள்.

இந்நிலையில், ஜெருசலேமிலுள்ள இஸ்லாமிய மத வழிப்பாட்டு தலமான அல் அக்சா மசூதியில் பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது துருக்கி அமைதியாக இருக்க முடியாது. அல்-அக்ஸா மசூதியை அடைந்து ஹராம் அல்-ஷரீப்பின் புனிதத்தை மிதிப்பது எமது சிவப்பு எச்சரிக்கையாகும்   என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், அல்-அக்ஸா மசூதி வளாகத்தினுள் இருந்து சுமார் 350 வழிபாட்டாளர்களை இஸ்ரேலிய பொலிசார் தடுத்து நிறுத்திய போது பதற்றம் அதிகரித்த பின்னர் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

‘முஸ்லிம்களின் முதல் கிப்லாவுக்கு எதிரான இழிவான செயல்களை நான் கண்டிக்கிறேன் தாக்குதல்களை விரைவில் நிறுத்த வேண்டும்’ என்று எர்டோகன் கூறினார்.

இஸ்ரேல் ‘அடக்குமுறை அரசியலை’ பின்பற்றுகிறது ‘பலஸ்தீனியர்கள் தனியாக இல்லை. இந்த தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது துருக்கி ஒருபோதும் அமைதியாக இருக்காது’ என்றும் கூறினார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...