மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் : பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ!

Date:

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவிக்கையில்,

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு என்பது அணு ஆயுதப் போரை தூண்டுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றது.

உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு தான் மூன்றாம் உலகப் போரைத் தூண்டுகின்றது. ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளையும் நிபந்தனை இல்லாத பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

லுகாஸ்ஷென்கோவின் கருத்துகளை ரஷ்யா கவனித்ததாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புதின் அடுத்த வாரம் அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்றும் புதின் கூறியிருந்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...