அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரிய தலைவர், புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மது ராபிஃ அல்ஹசனி அந்நத்வி மறைந்தார்!

Date:

அஷ்ஷெய்க் முஹம்மது ராபிஃ அல்ஹசனி அந்நத்வி ரஹிமஹுல்லாஹ், 1929 ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள ராய்ப்ரேலி என்ற கிராமத்தில் பிறந்தார்கள், இவர்களது பாசத்திற்குரிய தாய்மாமா தான் இமாம் அபுல் ஹசன் அல்ஹசனி அந்நத்வி ரஹிமஹுல்லாஹ். தோற்றத்திலும் , கல்வி ஞானத்திலும் தங்களது மாமாவை போன்று காட்சியளிப்பார்கள்.

அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board) இஸ்லாமியச் சட்ட முறைமைகளின் படி இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பாகும். இஸ்லாமியத் தனிநபர்ச் சட்டம்(ஷரீஆ) 1937ன் படி இஸ்லாமியச் சட்ட முறைகள் இந்தியாவில் அமலுக்கு வந்தது அதனை ஒழுங்குபடுத்தி பாதுகாக்க 1973ம் ஆண்டு இவ்வாரியம் உருவாக்கப்பட்டது. இந்திய இஸ்லாமியர்களின் முக்கிய தலைமை அமைப்பாகவும் நிலவுகிறது.

இமாம் அபுல் ஹசன் அல்ஹசனி அந்நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தலைமையில் இந்த சட்ட வாரியம் தோற்றுவிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரபு மொழியில் குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய துறையில் பாண்டித்துவம் பெற்று இருப்பதோடு பல புத்தகங்களை உஸ்தாத் அவர்கள் எழுதியிருக்கிறார்கள், நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் உருது மொழிகளும் ஆங்கில மொழியிலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

2000 ஆண்டு இவர்கள் தாய் மாமா இமாம் அபுல்ஹசன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மரணத்துக்கு பின் லக்னோ தாருல் உலூம் நத்வதுல் உலமா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

அகில உலக இஸ்லாமிய இலக்கிய அமைப்பின் அடித்தளமிட்டவர்களில் ஒருவர், இறுதிவரை துணைத் தலைவராக இருந்து வந்தார்கள் இன்று இதன் தலைமை அலுவலகம் சவுதி அரேபியாவில் மக்கா முக்கர்ரமாவில் இருக்கிறது.

சவுதி அரசின் கீழ் இயங்கும் மக்காவில் உள்ள அகில உலக முஸ்லிம் லீக்கின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியின் இஸ்லாமிய துறையின் உறுப்பினராகவும் ஆலோசராகவும் இருந்து வந்தார்கள்.

1981 ஆம் ஆண்டில் இந்திய அரசின் ஜனாதிபதி விருது அரபு மொழி சேவைக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டது.

மிக அமைதியாகவும், முகமலர்ச்சியடனும், தூரநோக்கு சிந்தனையுடனும், இறையச்சத்துடனும் மிகப்பேணுதலாகவும் ,உலகப் பற்றற்றவர்களாகவும் உஸ்தாத் அவர்கள் திகழ்ந்தார்கள்.

அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் சேவைகளை அங்கீகரித்துக் கொள்வானாக!!

உயர்தரமான சுவனத்தை நல்கிடுவானாக !!

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...