அரசியலில் கால் பதிக்கின்ற இளம் வேட்பாளர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் புத்தளத்தில் விசேட அறிவூட்டல் கருத்தரங்கு!

Date:

உள்ளூராட்சி மன்ற இளம் வேட்பாளர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான விசேட செயலமர்வு கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி புத்தளம் வில்பத்து கேட் ஹோட்டல் மண்டபத்தில் முழுநாள் நிகழ்வாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வை பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்ததுடன் நிகழ்வுக்கான அனுசரணையை MSI/IDEA அமைப்பு வழங்கியிருந்தன.

இந்நிகழ்வு புத்தளம் பகுதியில் இருக்கின்ற இளம் உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் அதேபோன்று புத்தளம் பகுதியில் இயங்குகின்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆகியோருக்காக மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வாக அமைப்பெற்றிருந்தது.

மேலும், இந்த அறிவூட்டல் நிகழ்வில் சமகால அரசியல் கள நிலவரங்களை தெளிவாக அறிந்துகொள்ளக்கூடிய நிகழ்வாகவும் அரசியலில் கால் பதிக்கின்ற இளம் வேட்பாளர்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில், சமூக செயற்பாட்டாளர்கள் எவ்வாறு அரசியல் விவகாரங்களை கையாள்வது போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

அதேநேரம், அவ்வாறான விடயங்களில் எத்தகைய அவதானங்களை செலுத்த வேண்டும். அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட காத்திரமான விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் கொடுக்கும் வகையில், ஒரு சிறந்த நிகழ்வாக இடம்பெற்றது.

இதன்போது நிகழ்வில் கொழும்பு பெப்ரல் அமைப்பின், மூத்த திட்ட அலுவலர், உபேக்சி பெர்னாண்டோ, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஜயந்த தெஹியத்தகே, மற்றும் சைல்ட் விஷன் இலங்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், புத்தளம் பெப்ரல் அமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி, ஏ.சி.எம்.ருமைஸ் வளவாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...