‘ஜாதிக ஜனரஜ பெரமுன’:இலங்கையில் உதயமாகும் புதிய அரசியல் கட்சி!

Date:

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை. மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு பதிலாக புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியல் சித்தாந்தம் வேண்டும். அதை மே மாதம் வெளிக்கொணருவோம்.

அதுவே ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...