அரச வைத்தியசாலைகளில் பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Date:

அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்

இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வருடாந்தம் 50 பில்லியன் ரூபாவையும் 13.6 மில்லியன் டொலர்களையும் செலவிடுவதாகவும் அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக அமைச்சரவையின் கோரிக்கைக்கு அமைவாக மேலும் 40 மில்லியன் ரூபாவை நிதியமைச்சு ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...