இடமாற்றங்களுக்கு எதிராக அஜித் ரோஹண, பிரியந்த வீரசூரிய முறைப்பாடு

Date:

இடமாற்றம் செய்யப்பட்ட ஏழு பிரதி பொலிஸ் அதிபர்களில் இருவர் தமது இடமாற்றங்களுக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர்களான அஜித் ரோஹண, மற்றும் பிரியந்த வீரசூரிய ஆகியோரே தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்ணான்டோவுக்கு இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்கள்.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் நியாயமற்ற இடமாற்றங்களை அங்கீகரிக்க வேண்டாம் என்று அவர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் சந்திரா பெர்னாண்டோவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமது இடமாற்றம் தொடர்பான பரிந்துரைகளுக்கு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

தமது இடமாற்றங்களுக்கு உரிய காரணங்கள் கூறப்பட்டிருக்கவில்லை என்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக அஜித் ரோஹண தென் மாகாணத்திற்கு பொறுப்பான பதவியில் இருந்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் அதிபராக மாற்றப்பட்டார்.

மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரதி பொலிஸ் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லலித் பத்திநாயக்க பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் இருந்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவு சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் எல்.கே.டபிள்யூ.கே. சில்வா பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சஜீவ மெதவத்த சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு ஆகியோரும் இடமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...