முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இப்தார் நிகழ்வில் இராஜதந்திரிகள், முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பல முக்கிய இஸ்லாமிய மத தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகளை பாராட்டினர்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்திற்கான பிரார்த்தனைகளுடன் இப்தார் விழா ஆரம்பமானதுடன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,
‘இந்தச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்கு நீங்கள் அனைவரும் இன்று வந்திருப்பதில் நான் பெருமையடைகிறேன். நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து, நமது ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நமது நாட்டின் அமைதி மற்றும் செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் இது.
‘இலங்கையர்கள் அனைவரும் அவர்களது மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும் அவர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அனைத்து குடிமக்களும் செழிக்கவும் வெற்றிபெறவும் சம வாய்ப்புகள் உள்ள, உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான எம்.யு.எம்.அலி சப்ரி, திரான் அலஸ், விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌஸி, மரிஜான் ஃபலீல், எஸ்.எம்.எம்.முஷாரப், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.