உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் ராகுல் காந்தி!

Date:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (22) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பங்களாவை விட்டு வெளியேற காரில் ஏறும் முன், 19 ஆண்டுகளாக இந்த பங்களாவை கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், உண்மையைப் பேசியதற்கு விலையாக பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

உண்மையை பேசியதற்காக எந்த இழப்பீடும் கொடுக்க தயார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிடைத்த அதிகாரபூர்வ பங்களாவை ஏப்ரல் 22-ம் திகதி முன் காலி செய்யுமாறு லோக்சபா வீட்டு வசதி வாரியம் ராகுல் காந்தியிடம் தெரிவித்திருந்தது.

கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதாலும் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் மார்ச் 24 அன்று அறிவித்தது.

2004-ல் ராகுல் காந்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த அரசு பங்களாதான் இப்போது வரை அவரது வீடாக இருந்தது.

ஜன்பத்தில் உள்ள தனது தாய் சோனியா காந்தியின் வீட்டிற்கு தற்காலிகமாக செல்லவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...