ஏப்ரல் மாதத்தில் முதன்மை பணவீக்கத்தில் வீழ்ச்சி

Date:

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் காணப்பட்ட 50.3 வீத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 35.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தளம்பல் மிக்க உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் குறைவடைந்தமை பணவீக்க வீழ்ச்சிக்கு காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 மார்ச்சில் 47.6 வீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் 2023 ஏப்ரலில் 30.6 வீதமாக குறைந்துள்ளது.

 

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...