ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.15,000 உதவித்தொகை !

Date:

அஸ்வசுமா நலத்திட்ட உதவித் திட்டம் 01 ஜூலை 2023 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெளியிடப்பட்டது.

அதன்படி, நலத்திட்ட உதவித் திட்டத்திற்கு 4 சமூகப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு, அந்த பிரிவுகள் இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, ஏழை மற்றும் மிகவும் ஏழ்மை என பெயரிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இடைநிலைப் பிரிவில் உள்ள குடும்ப அலகுக்கு, 31 டிசம்பர் 2023 வரை மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகையும் பாதிக்கப்படக்கூடிய என அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அலகுக்கு 2025 மார்ச் வரை மாதாந்தம் ரூ. 5,000 உதவித்தொகையும்  வழங்கப்படும்.

மேலும் ஜூலை 1, 2023 முதல் 3 ஆண்டுகளுக்கு, ஏழைப் பிரிவின் கீழ் உள்ள ஒரு குடும்ப அலகுக்கு ரூ. 8,500 மற்றும் மிகவும் ஏழ்மையான பிரிவின் கீழ் வரும் குடும்ப அலகுக்கு ரூ. 15,000 உதவித் தொகையும் வழங்கப்படும் என வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...