காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த ஐஎஸ் தலைவர் தலிபான்களால் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம், கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையினரால் தகர்க்கப்பட்டது.
9/11 தாக்குதல் என்று அறியப்படும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்கப் படை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இறக்கப்பட்டன.
அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறின. அபோது காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 183 பேர் உயிரிழந்தனர்.