குணமடைந்தும் வீடுகளுக்கு செல்லாத நோயாளர்கள்: நெருக்கடியில் தேசிய வைத்தியசாலைகள்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை உட்பட மேலும் பல முக்கிய வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைந்தும் வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், மருத்துவமனை நிர்வாகத்தால் மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென தெரிவித்தார்.

நோயாளர் காவு வண்டியின் ஊடாக பலர் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை.

அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாவர். குணமடைந்த சிலருக்கு வீடு செல்வதற்கான வழி தெரியவில்லை. அவ்வாறு வைத்தியசாலையில் உறவினர்கள் எவரேனும் தங்கியிருப்பின் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டியது மருத்துவமனையின் பொறுப்பாகும். குணமடைந்ததன் பின்னர் அது தொடர்பான பொறுப்புக்கூறலை ஏற்க வேண்டியது சமூக பாதுகாப்பு அமைச்சுக்குரியதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...