மலாக்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலாயாவின் 5ஆவது சுல்தான் இஸ்கந்தர் ஷா அடங்கப்பெற்றுள்ள Fort Canning என்றும் கொடி மலை என்றும் அழைக்கப்படுகின்ற மலைப்பகுதி வளாகத்தில் நேற்றையதினம் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கப்பூர் Management university அருகில் மரங்கள் அடர்ந்த சூழலில் அமையப்பெற்றுள்ள இவ்வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான மு. தமிமுன் அன்சாரி உட்பட புதிய நிலா ஆசிரியர் ஜஹாங்கீர் UIMA தலைவர் ஃபரியுல்லா, பிஸ்மி இணைய தள வானொலி நிறுவனர் சீனி, நாகப்பட்டினம் அசோசியன் தலைவர் சாதிக், ஆசிரியர் ஜாகீர் உசேன், ஜாமியா சூலியா கமிட்டி உறுப்பினர் ஜமான் மற்றும் பல்வேறு இந்திய- தமிழக சமூக ஆர்வர்களும் பங்கேற்றனர்.