சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்குத் தடை!

Date:

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பஸ் நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

பஸ்களில் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குணசிங்கபுர – பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடங்களுக்குள் யாசகர்கள் செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக, பஸ்களில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என பஸ் பணிக்குழாமினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...