தமிழ் ஊடகத்துறையில் சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக கொடிகட்டிப் பறந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.
வடக்கில் போர் நடந்த காலப்பகுதியில் நெருக்கடியான சூழலில் இருந்து செய்திகளை தேடி எடுத்து அதிகாரவர்க்கம் மறைக்க முற்பட்ட தகவல்களைக் கூட மிகவும் தைரியமாக நின்று வெளிப்படுத்துவதில் அதி திறமைசாலியாக செயல்பட்ட ஒருவராவார்.
அவரது ஊடக பங்களிப்பு தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரமன்றி சிங்களம் , ஆங்கிலம் போன்ற ஊடகங்களுக்கும் மிகவும் அவசியமானதாக இருந்து வந்தது.
அதுமட்டுமல்லாமல் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் நடத்திய பல ஊடக பயிற்சி செயலமர்வுகளுக்கு இணைப்பாளராகவும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடததக்கதாகும்.
அன்னாரது மறைவுக்கு நியூஸ் நவ் ஊடகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.