சூடானில் மேலும் 40 இலங்கையர்கள் தவிப்பு: மீட்பு பணிகள் தீவிரம்

Date:

சூடானில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் மேலும் 40 க்கும் ​மேற்பட்ட இலங்கையர்கள் அங்கு தவித்து வருவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவிக்கின்றது.

சூடானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 13 இலங்கையர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு ஜித்தா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நிர்க்கத்தியாகியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு அழைத்துவரும் நோக்கில், சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி எம் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.

சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கிடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இதுவரை 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...