சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்த வாரத்தில் இன்றைய தினம் மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இன்று வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தின் பின்னர், செஸ் சட்டத்தில் திருத்தம் செய்வது மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியன தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.