ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு!

Date:

ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது.

இச்சம்பவத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டதோடு பிரதமரை பாதுகாப்பு வீரர்கள் வெளியேற்றினர்.

பிரதமரை நோக்கி குண்டை வீசியதாக ஒருவரை கைது செய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததையடுத்து தற்போது பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...