தேசிய வெசாக் நிகழ்வுக்காக அலிசப்ரி ரஹீம் 7 இலட்சம் ரூபா அன்பளிப்பு!

Date:

எதிர்வரும் தேசிய வெசாக் நிகழ்வுக்காக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஏழு இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளார்.

புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விழா தொடர்பான கூட்டத்தில் மேற்படி உதவித்தொகைக்கான காசோலையை பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் மாவட்ட செயலாளரிடம் கையளித்தார்.

தேசிய வெசக் பண்டிகை இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் புத்தளம் மவாட்டச் செயலகத்தினால் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் , சமகாலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அரச நிறுவனங்கள் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதால் மேற்படி வெசக் பண்டிகைக்கான செலவுகளுக்கு பணம் திரட்டுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோகியுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் எஸ்.எச்.எம்.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் தெரிவித்திருந்தார்.

புத்தளம் மாவட்டச் செயலாளரின் வேண்டுகோளுக்காக இந்த விடயத்தை கருத்தில் கொண்டு புத்தளம் மாவட்டதில் வசிக்கும் சகல இன மக்களின் சகவாழ்வுக்காக மேற்படி பண்டிகைக்காக ஏழு இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...