நாட்டின் மத பன்முகத்தன்மைக்கு ரமழான் புதிய அர்த்தத்தை அளிக்கிறது: பிரதமரின் வாழ்த்து செய்தி

Date:

எமது முஸ்லிம் சமூகம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் வேளையில், அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்திற்கு எந்தப் பாத்திரமும் இல்லாத நல்லொழுக்கமுள்ள இலங்கை சமூகத்திற்காக எமது மத போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிப்போம் என பிரதமர் தினேஷ் குணவர்தன ரமழான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பழங்காலத்திலிருந்தே, ரமழான் காலத்தில், முஸ்லிம் சமூகம் தங்கள் மத சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

மேலும் நாட்டிலுள்ள கலாசார மற்றும் மத பன்முகத்தன்மைக்கு முன்மாதிரியான அர்த்தத்தை அளித்து ஏனையவர்களுக்கு உதவுகிறது.

எனவே, உலகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில், சுமை சுமக்கும் மக்களிடையே மனிதாபிமானம் உருவாகும் ஒரு இனிமையான சூழலை உருவாக்க ரமழான் சாதகமான சூழலை வழங்குகிறது.

நாட்டின் நிர்வாகச் செயற்பாடுகள், வர்த்தகத் துறைகள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் பங்களிப்புக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்த தனித்துவமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அன்பான அர்ப்பணிப்பு, ஒரு தேசமாக நாம் தற்போது கடந்து வரும் மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமையையும் செயலூக்கமான பங்களிப்பையும் தொடர்ந்து பலப்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.” அனைவருக்கும் ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...