பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமூகத்துடனான விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், நிபுணர்கள் குழுவின் ஊடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பொருத்தமற்ற சரத்துக்களை நீக்குமாறு கடிதத்தின் மூலம் பிரதம பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த பீடங்களின் பிரதம பீடாதிபதி உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதன் பரந்த வரையறையை எடுத்துரைத்துள்ளார், இதன்படி அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் பதவியில் உள்ள அரசாங்கத்தின் குறைபாடுகள் பற்றி பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போதைய நிலையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவது இலங்கைக்கு பாதகமாக அமையும் எனவும் எனவே நிபுணர் குழுவொன்றின் உள்ளீடுகளை பெற்று சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...