கல்முனை  ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடைக் கட்டுப்பாட்டால் சர்ச்சை: சமூக நீதிக்கட்சி கள விஜயம்!

Date:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்ற 9 சுகாதார உதவியாளர்கள், தங்களது மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பேணி சீருடை அணிவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சீருடை தொடர்பான அரச சுற்றுநிருபத்தில் மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பேணி சீருடை அணிவது தெளிவாக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு அணியும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த சுற்றுநிருபத்திற்கு முரணாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பிரச்சினை குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சமூக நீதிக்கட்சியின் தலைவர்கள் நேற்றைய தினம் (09.08.2026) வைத்தியசாலைக்கு நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தில் சமூக நீதிக்கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமத், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமத் மற்றும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னின்று செயற்பட்டு வரும் நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையின் அதிபர் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்த தலைவர்கள், சீருடைக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகப் பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு வழிகாட்டினர்.

மேலும், இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் உடனடியாக முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரச்சினையை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லவும் சமூக நீதிக்கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...