நாட்டில் பரவும் காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்கள் உயிரைக் கூட இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க, இந்த நாட்களில் மக்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இன்றைய நாட்களில் பொதுமக்களிடையே அதிகம் காணப்படுவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நோய்கள் தொற்றக்கூடியவை, இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...