முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான குடிநீர் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம், ஜனாதிபதி செயலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், கடந்த மாதத்திற்கான கட்டணமான 46,000 ரூபாவில், முந்தைய குடியிருப்பாளர்கள் செலுத்தாத நிலுவைத் தொகையும் அடங்கும்.
எனவே, இந்த விவகாரத்தை எவ்வாறு தொடர்வது என்பது குறித்த கூடுதல் அறிவுறுத்தல்களைக் கோரியுள்ளது. எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பதில் வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது.