நாடளாவிய ரீதியில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் முல்லைத்தீவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் ‘வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்’ என்ற பதாகையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
அதேபோல மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.