பாராளுமன்றில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவதை பிற்போட தீர்மானம்!

Date:

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை நலிந்தவர்கள், உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான சமூக நெருக்கடிகள் உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் தரப்பு தற்போது மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க விரும்புகின்றது எனவும் பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...