புத்தளம் தம்பபண்ணி பிரதேசத்தில் புதிய பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது!

Date:

புத்தளம் தம்பபண்ணி சேற்றுப்பள்ளம் பிரதேசத்தில் மஸ்ஜிதுர் ரய்யான் புதிய பள்ளிவாசல் இன்றையதினம் வியாழக்கிழமை (06) ளுகர் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் வான் வீதி தக்வா பள்ளியினால் இதற்கான காணி வக்பு செய்யப்பட்டு செரண்டிப் பவுண்டேசன் ரிலீப் அன்ட் டெவலப்மன்ட் (SFRD) துருக்கி நன்கொடையாளரினால் இந்த புதிய மஸ்ஜித் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில், உலமாக்கள், பொதுமக்கள், மத்ரஸா மாணவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதன் போது உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரபல கட்டட கலை நிறுவனமான புத்தளம் எச்.எம்.பில்டர்ஸ் நிறுவனம் பள்ளிவாசலை அமைத்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...