புற்றுநோய் உண்டாக்குமா போர்ன்விடா?:தவறான விளம்பரங்களை அகற்றி, குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை சமர்பிக்க நோட்டீஸ்!

Date:

ஆபத்தான மூலப் பொருட்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், விளம்பரத்தை நிறுத்தும்படியும், பாக்கெட்களில் உள்ள ‘லேபிள்’களை மாற்றும்படியும், ‘போர்ன்விடா’ என்ற ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் உட்கொள்ளும் சாக்லேட்-சுவை கொண்ட போர்ன்விடாவில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), போர்ன்விட்டா தயாரிப்பு நிறுவனமான மொண்டலெஸ் இந்தியா இன்டர்நேஷனல்-யிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மொண்டலெஸ் இன்டர்நேஷனல் துணை நிறுவனமான கேட்பரியால் தயாரிக்கப்படும் போர்ன்விட்டா, அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான சர்க்கரை, கோகோ திடப்பொருட்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக, தன்னை ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஒரு சுகாதார பயிற்சியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ரேவந்த் ஹிமத்சிங்கா கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

மேலும் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு சர்க்கரையை கொண்டிருப்பதால், அதனை பாலில் கலந்து குடிப்பது தீங்கானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மொண்டலெஸ் இந்தியா நிறுவனம் அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அந்த வீடியோவை ரேவந்த் நீக்கிவிட்டார்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்தியாவின் மொண்டலெஸ் இன்டர்நேஷனல் தலைவர் தீபக் ஐயருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், “போர்ன்விடா தயாரிப்பில் அதிக சதவீத சர்க்கரை மற்றும் உள்ளடக்கம்/பொருட்கள்/கலவைகள்/சூத்திரம் ஆகியவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போர்ன்விடா அதன் வெளிப்பாடுகளைக் காட்டத் தவறிவிட்டது. எனவே இதற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...