பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பெப்ரல் அமைப்பு கடிதம்!

Date:

பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பெப்ரல் (PAFFREL) அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதன் காரணமாக நடுநிலைமை, கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது சிக்கலாகி வருவதாக பெப்ரல் அமைப்பு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற ஆட்சியினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகளுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்குள்ள சந்தர்ப்பம் இல்லாமற்போகுமாயின், சட்டத்தை மதிக்கும் சாதாரண பொதுமக்களும் விரக்தியடைவதைத் தவிர்க்க முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...