மாபிள்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Date:

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளுர் சந்தையில், அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன.

அதேநேரம், மாபிள்களுக்கான கேள்வியும் சந்தையில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இந்த நிலையில், கட்டாயமாக மாபிள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீன் விலை 25 வீதம் அளவில் குறைவடையக்கூடும் என பேலியகொடை மத்திய கடலுணவு வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறியுள்ளார்.

இதேவேளை, புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பிஸ்கட்டுகள், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களின், அதிகரிக்கப்பட்ட விலைகளை, இந்த வாரத்தில் குறைக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...