யெமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மேலும் 320 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரமழான் மாதத்தை முன்னிட்டு அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதி உதவி வழங்க முன்வந்தது. பாப் அல்-ஏமன் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்று நிதியுதவி பெற ஏராளமான மக்கள் முண்டியடித்துக்கொண்டனர். இந்தக் கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 85-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். மேலும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
எனினும், கூட்டத்தை கட்டுப்படுத்த கிளர்ச்சியாளர்கள் மட்டும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மின்சார கேபிளில் தீப்பிடித்து வெடித்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இரு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,000 டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து யெமன் நாட்டின் அதிகாரிகள்,’இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
79 people killed and 110 injured after a stampede in a school in Sanaa, Yemen where poor people gathered to receive charities during Ramadan.#Yemen #Sana #Ramadan pic.twitter.com/3ujUxKzXZW
— Wali Khan (@WaliKhan_TK) April 20, 2023
ராணுவ உடையில் ஆயுதம் ஏந்திய போராளிகள், விநியோகிப்பாளர்கள் கூட்ட நெரிசலிலிருந்து மக்களை அப்புறப்படுத்தும்போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 2014-ல் சனா நகரைக் கைப்பற்றியபோது தொடங்கிய உள்நாட்டு மோதலால் சீர்குலைந்த நாடுகளில் ஒன்று யெமன் . ஏமனில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டுப் போரை உலகின் மிக மோசமான துயரங்களில் ஒன்று என ஐ.நா சபை விவரிக்கிறது.
]பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் யெமன் மக்களுக்குத் தொண்டு நிறுவனங்கள் உதவுவது வழக்கம்.