ராம நவமி வன்முறை: தீ வைத்து எரிக்கப்பட்ட மதரஸா, நூலகம்!

Date:

ராம நவமி ஊர்வலத்தின்போது இந்துத்துவ கும்பலால் அஜிசியா என்னும் மதரஸா எரிக்கப்பட்டது உலக நாடுகளிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது.

CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராம நவமி ஊர்வலத்தின்போது இந்துத்துவ கும்பலால் அஜிசியா என்னும் மதரஸா எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநவமியை முன்னிட்டு பீகாரில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது.

அதில் நாலந்தா மாவட்டத் தலைமையகமான பிஹார்ஷரீப்பில் உள்ள  ககன் திவான் மொஹல்லா என்னும் இடத்தில் ஊர்வலம் நடந்தபோது திடீரென இரு தரப்புக்கு இடையில் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் எட்டு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், இரு தரப்பிலும் 14 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கலவரத்தில்போது சிலர் அங்கிருந்த அஜிசியா என்னும் மதரஸாவை சூழ்ந்துகொண்டு அதற்கு தீ வைத்தனர். இதில் அந்த மதரஸா முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த 4500 புத்தகங்கள் அடங்கிய நூலகமும் எரிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் தற்போதுவரை 29 பேர் கைதுசெய்யப்பட்டுளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ராம நவமி வன்முறையைத் தொடர்ந்து பீகாரின் பல மாவட்டங்களில் 48 மணி நேரம் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.

மேலும், இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...