வெப்பமான காலநிலை அடுத்த மாதமளவில் குறையும் !

Date:

எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர், வெப்பமான காலநிலை குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் தற்போது மழை கிடைக்கப்பெறும் நிலையில், வெப்பம் குறைவடைவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் காணப்பட்ட வெப்பநிலை தற்போது சிறியளவில் குறைவடைந்துள்ளது. எனினும், இன்னும் வெப்பநிலை நீங்கவில்லை.

மழைவீழ்ச்சி தொடர்ந்தும் அதிகரிக்குமானால், வெப்பநிலை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...