14 வருடங்களின் பின்னர் மலேரியா நோயினால் முதல் மரணம் பதிவாகியது!

Date:

14 வருடங்களின் பின்னர் இலங்கையில் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவரே மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் தாமர களுபோவில தெரிவித்துள்ளார்.

வருடத்தின் கடந்த 4 மாதங்களில் இலங்கையில் 11 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா எதிர்ப்பு பிரசாரம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 37 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரசார திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...