15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு

Date:

இலங்கையர்கள் 15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையே 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தாதியர் சேவைக்கான 51 ஆவது குழுவாக இந்த 15 இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 302 இலங்கையர்கள் தாதியர் வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, இந்த வேலைவாய்ப்பானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாத்திரமே வழங்கப்படும் எனவும், இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு வௌிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...