2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை !

Date:

ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த வருடம் (2022) ஜூன் மாதம் 22 ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 1ஆம் திகதி வரை உள்நாட்டு விடுமுறைக்கான 150 விண்ணப்பங்களும், வெளிநாட்டு விடுமுறைக்கான 1000 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாத்திரம் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் எனவும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

பல அரச ஊழியர்கள் கொரியாவுக்குச் செல்வதற்காக வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கின்றனர் மற்றும் பெரும்பாலான விண்ணப்பங்கள் மொழிப் பிரச்சினை காரணமாக நிராகரிக்கப்படுகின்றன.

எனினும், மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு மீண்டும் விண்ணப்பிப்பார்கள், அதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும், அதன்படி, வெளிநாட்டு விடுப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம், என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார் .

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...