IPL 2023 : டெல்லியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூர்!

Date:

பெங்களூரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். மஹிபால் லாம்ரோர் 26 ஓட்டத்திலும், மேக்ஸ்வெல் 24 ஓட்டத்திலும், டுபிளிசிஸ் 22 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்கம் முதல் டெல்லி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மணீஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

அக்சர் படேல் 21 ஓட்டங்கள், டேவிட் வார்னர் 19 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் நோர்க்யா 23 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி சார்பில் விஜயகுமார் விஷாக் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...