IPL 2023 : 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி!

Date:

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதின.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ஓட்டத்திலும், ராகுல் திரிபாதி 9 ஓட்டத்திலும் வெளியேறினர்.

அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உட்பட அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ஓட்டங்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ஓட்டம் எடுத்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 100 ஓட்டங்களுடன், கிளாசன் 16 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து, 229 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ஓட்டங்களை குவித்தார். அடுத்ததாக, ரங்கு சிங் 51 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

பின்னர், ஜகதீசன் 36 ஓட்டங்களும், ஷர்துல் தாகூர் 12 ஓட்டங்களும், வெங்கடேஷ் ஐயர் 10 ஓட்டங்களும், ஆண்டிரே ரூச்சல் 3 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 205 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம், ஐதராபாத் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...