தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் வாக்காளர்களுக்கான உரிமைகள் தொடர்பான விசேட பயிற்சிக் கருத்தரங்கு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி புத்தளம் பாலாவியில் அமைந்திருக்கின்ற புத்தளம் சர்வமத செயற்குழு அமைப்பின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக இலங்கையின சைல்ட் விஷன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், புத்தளம் பெப்ரல் அமைப்பின் மாவட்ட இணைப்பதிகாரி, ஏ.சி.எம்.ருமைஸ் அவர்களும் ஓய்வுபெற்ற ஆசிரியர் சமூக செயற்பாட்டாரும், பயிற்றுவிப்பாளருமான எம்.ஜே.நசீர் அவர்களும் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தினார்கள்.
தகவலறியும் உரிமைச் சட்டமானது தற்போது பொதுமக்கள் மத்தியிலே அறிமுகம் குறைந்த ஒரு விடயமாக காணப்படுகின்றது.
அதற்கமைய, RTI என்கின்ற தகவலறியும் சட்டத்தை அறிவதன் ஊடாக இந்நாட்டில் வாழும் பிரஜைகள், எவ்வாறான பணிகளில் ஈடுபடலாம், எவ்வாறு ஊழல் துஷ்பிரயோகம் இடம்பெறும் செயற்பாடுகளிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பற்றலாம் போன்ற விடயங்களை தெளிவுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் இந்நிகழ்வு காணப்பட்டது.
இதேவேளை, ஒரு நாட்டில் தேர்தல் இடம்பெறுமாயின் வாக்காளர்கள் என்ற முறையில் மக்கள் செய்ய வேண்டிய கடமைகள், தெரிந்து கொள்ள வேண்டிய சட்டதிட்டங்கள், தேர்தல் கால ஊழல் வன்முறைகள் போன்ற விடயங்களை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த இரு நிகழ்வுகளும் அமைந்திருந்தன.
இன்றைய காலத்துக்கு தேவையான அனைத்து இன மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாக இரு வளவாளரர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தநிகழ்வு அமைந்திருந்தது.
காலத்தின் தேவைக்கருதி இவ்வாறான பயிற்சிக்கருத்தரங்கை ஏற்பாடு செய்தமையானது பாராட்டுக்குரியது.