News now இணைய ஊடகத்தின் தாய் நிறுவனமான பஹன மீடியா (pvt. Ltd ) ஏற்பாட்டில் நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானாவின் ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் நேற்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு இப்தார் வைபவம் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகத்தின் விடிவை நோக்கிய பயணத்தில் பேதங்கள் அற்ற ஒரு சமூக மாற்றத்தின் தேவையை உணர்த்தும் வகையில் எற்பாடு செய்யப்பட்ட இவ் வைபவத்தில் பல்வேறு தரப்புக்களிலும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகத் தலைமைகள் பலரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்வர் அலி, சிரேஷ்ட ராஜ தந்திரியும் இலங்கை ஹஜ் குழுவின் தலைவருமான இப்ராஹிம் அன்சார், வக்பு சபையின் சார்பில் ஓய்வு பெற்ற உதவி பொலீஸ் மாஅதிபர் மாஹிர் டூல், தரீக்காக்கள் உயர் சபையின் தலைவர் அஸ்ஸெய்யித் நகீப் மௌலானா, ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்சில் தலைவர் அஷ்ஷெய்க் ஹஸ்புல்லாஹ் (பஹ்ஜி), அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தியின் பிரதிநிதியாக அஷ்ஷெய்க் பாசில் ஹுமைதி, இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹி, தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத் தரணி T.K. அசூர், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல் ஹாஜ் தௌபீக் ஸுபைர், ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹுசைன் முஹம்மத், அதன் பணிப்பளர் அஷ் ஷெய்க் M.B.M ஸரூக், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தலைவர் லுக்மான் ஷஹாப்தீன் உட்பட தேசிய Y.M.M.A, ஸலாமா, மிஷ்காத் , ரம்ய லங்கா, M.F.C.D, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
சிவில் சமூகத்தின் சார்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் S.L. நவவி, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் முஹம்மத் மஹீஸ், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் ஆலோசகர் அல்ஹாஜ் அஹமத் முனவ்வர்,டாக்டர் சைபுல் இஸ்லாம், டாக்டர் சனீக் உட்பட பஹன மீடியாவின் முகாமைத்துவ சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நிறுவனத்தின் தலைவர் ஸெய்யித் சாலிம் மௌலானா இந்நிகழ்வில் உரை நிகழ்த்தியதோடு நன்றி உரையை கலாநிதி ஹசன் மௌலானா அல்காதிரி வழங்கினார். அஷ்ஷெக் ஹஸ்புல்லாஹ் பஹ்ஜி அவர்களால் துஆ பிராத்தனை செய்யப்பட்டது.
ரமழான் விடைபெறும் இத் தருணத்தில் முஸ்லிம் சமூகத்தில் இணக்கப்பாடான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒரு அடித்தளமாக இந்த இப்தார் நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.