இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் பாரத் லால், ஜனாதிபதியை சந்தித்தார்!

Date:

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  (01) சந்தித்தனர்.

இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது மற்றும் பயனுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிவதே பாரத் லாலின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும்.

மக்கள் சேவைகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் இதன் மூலம் பல பில்லியன் ரூபாயை சேமிக்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் பாரத் லால் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அரச நிர்வாகம் மற்றும் அரச கொள்கை தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு பாரத் லாலிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...