இரண்டாவது டெஸ்ட் போட்டி : ஸ்டேர்லிங் மற்றும் கெம்ஃபர் சதங்கள் குவிப்பு!

Date:

அயர்லாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, இலங்கை-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகின்றது.

முதல் நாள் முடிவில் அயர்லாந்து 4 விக்கெட்டுக்கு 319 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் பால்பிரின் 95 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

லார்கன் டக்கெர் 78 ஓட்டத்துடன், கர்டிஸ் கேம்பெர் 27 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டக்கெர் 80 ஓட்டத்தில் போல்டு ஆனார். காயம் காரணமாக முந்தைய நாளில் பாதியில் வெளியேறிய பால் ஸ்டிர்லிங் மீண்டும் களமிறங்கினார்.

முதலாவது சதம் அடித்த பார் ஸ்டிர்லிங் 103 ஓட்டத்தில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்த கர்டிஸ் கேம்பெர் முதல் சதம் அடித்த நிலையில் 111 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 145.3 ஓவரில் 492 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.

அத்துடன் இன்னிங்சில் இரு அயர்லாந்து வீரர்கள் சதம் காண்பதும் இதுவே முதல் நிகழ்வாகும்.

இலங்கை சார்பில் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

போல் ஸ்டேர்லிங், கேர்ட்டிஸ் கெம்ஃபர் ஆகிய இருவரும் குவித்த கன்னிச் சதங்களின் பலனாக இலங்கைக்கு எதிரான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து 492 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அயர்லாந்து குவித்த அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...