இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்வதற்கான தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.