கடத்தி செல்லப்பட்ட இளைஞனை காவல்துறை அதிகாரிகளால் அதிரடியாக மீட்பு!

Date:

இளைஞர் ஒருவரை கடத்திச்சென்ற கும்பலை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மடக்கிப் பிடித்துள்ள சம்பமொன்று மத்துகம பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது. மீகத்தன்ன, தியபத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் வீட்டிற்கு பெண் ஒருவர் மூன்று பேருடன் நேற்று இரவு வந்து அவரை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், கடத்தப்பட்ட இளைஞனுடன் சந்தேகநபர்களான நால்வரும் முச்சக்கரவண்டியில் பயணித்த போது, ​​மத்துகம நகரின் மையப்பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது தான் கடத்தப்படுவதாக அந்த இளைஞன் கூச்சலிட்ட போது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் கடத்தல் சம்பவம் தெரியவந்துள்ளது. பணத் தகராறு காரணமாக இந்த கடத்தல் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக மேகத்தன்ன காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஏனைய சந்தேக நபர்கள் தெஹிவளை, கிருலப்பனை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...