குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜூலையில் மேலும் சலுகைகள்: பிரதமர்

Date:

தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்கள் தாம் வாக்களிக்கக் கோரும் தொகுதிக்கு அருகாமையில் உள்ள தொகுதியில் பணிபுரியுமாறு அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

அண்மையில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழ் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த விடயங்களை முன்வைத்தார்.

இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்த போதிலும், அவ்வாறான தகவல்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை எனவும் பிரதமர் கூறினார்.

கடந்த 12 மாதங்களில் அரச சேவையில் இருந்து எவரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், சம்பளம் அல்லது ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான அடித்தளத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, வீண்விரயம் மற்றும் ஊழலை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நம் நாட்டு விவசாயிகள் மீது நம்பிக்கை வைத்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஜூலையில் மேலும் சலுகைகள் வழங்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
என்றார்.

 

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...