கார் கழுவுதல், சேர்விஸ் கடைத்தொகுதி வசதிகளை வழங்கத் தயாராகும் வெளிநாட்டு எரிபொருள் நிலையங்கள் !

Date:

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், கார் கழுவுதல், சேர்விஸ் பகுதிகள், கடைகள் மற்றும் மோட்டல்களுடன் கூடிய எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன.

சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ்-ஷெல் ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற அண்மையை கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .

இந்த முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுகிறது, இது முக்கியமாக வெளியூர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு பொருந்தும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

நடைமுறையில் உள்ள QR கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது

ஒரு எரிபொருள் நிலையத்தின் சாதாரண பரப்பளவு சுமார் 40 பேர்ச் ஆகும், ஆனால் அத்தகைய ஒவ்வொரு நிலையத்திற்கும் சுமார் 1 ½ ஏக்கர் வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டம் பெரும்பாலும் வெளியூர் எரிபொருள் நிலையங்களுக்குப் பொருந்தும்.

கொழும்பில், காணி கிடைக்கப்பெறும் அடிப்படையில் அது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமையும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த மாத தொடக்கத்தில் இரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...