சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை!

Date:

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகின்றது.

மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு Desistor Network என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.

சிறையில் இருந்து விடுதலை அடைபவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், அவர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையைப் பின்பற்ற உதவுவதும் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், விடுதலை அடைந்தவர்களை உரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக புதிய Telegram வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துடன் இன்னும் சில திட்டங்களைச் சேர்த்து செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சி குறித்தும் ஆராயப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...