டயனா கமகேவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காது!

Date:

குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்வது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்காது என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முன்னதாக, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரியென்சி அர்செகுலரத்ன மற்றும் உதார முஹந்திரம்கே தலைமையிலான சட்டத்தரணிகள் குழு போதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் டயானா கமகேவைக் கைது செய்ய முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டியது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் டயனா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இது குறித்து இன்று தனது முடிவை அறிவித்த நீதிவான், இராஜாங்க அமைச்சரை உரிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எனவே இது தொடர்பில் தாம் உத்தரவு பிறப்பிப்பது தேவையற்றது என நீதவான் தெரிவித்துள்ளார். அதன்பின், வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...